பழு வேட்டரையர் -வேட்டுவ குடியில் ஒரு உட்குழு தலைவன்
- Posted on Tue Feb 1, 2022
- 1015 Views
பழு வேட்டரையர் -வேட்டுவ குடியில் ஒரு உட்குழு தலைவன்.
பழு என்ற சொல் ஆலமரம் என்று பொருள் .ஆலமரம் நிறைந்த பகுதிகளை பழுவூர் என்று அழைக்கப் பட்டது .பழுவூரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த வேட்டுவ குடியை சேர்ந்த அரையரை பழுவேட்டரையர் என்று அழைக்கப் பட்டனர் .இவர்கள் முதலாம் ஆதித்தன் சோழன் காலத்தில் (கிபி 881 ) இருந்து முதலாம் இராஜேந்திர சோழன் காலம் வரை அப்பகுதிகளை ஆண்டனர் .
வேட்டுவ குடியை சேர்ந்த அரையர்களின் சிறப்பு பெயர்கள்:
குமரன் கண்டன்,குமரன் மறவன் ,குமரன் கண்டனின் மகன் கண்டன் அமுதன் ,குமரன் மறவனின் மகன் மறவன் கண்டன் ,மறவன் கண்டனின் மகன்கள் கண்டன் சுந்தரசோழன் மற்றும் கண்டன் சத்துரு பயங்கரன்,கண்டன் மறவன்
பழு =பழுவூரை குறிக்கும் .
வேட்டரையர் =வேட்டு குடியை சேர்ந்த அரையரை குறிக்கும் .
'குறுப்பு நாட்டு விசையமங்கலத்து வேட்டவூர்’
வேட்டவூர் =வேட்டு ஊர்
'சிறு பழுவூர்த் திருவாலந்தத்துறை உடையார் தேவதானமாக வேட்டுக் குடி பன்மகேசுவரப் பேரேரிக் கீழ் நிலம் இவ்வேரிக்கு தெற்கு '(SII VOL-5, NO-664, கிபி 10)
பழுவூரில் ஒரு ஏரியின் பெயர் வேட்டுக் குடி பன்மகேசுவரப் பேரேரி ஆகும் .
வேட்டுக் குடி =வேட்டுவ குடியை சுட்டும் .
பன்மகேசுவரப் பேரேரி =ஏரியை குறிக்கும் .
வேட்டுவ குடி பெயரை ஏரிக்கு வைக்க பட்டுள்ளது .
'பழு வேட்டரையர் மகளார் நம்பிராட்டியார் அருமொழி நங்கையார் '(SII Vol-7, No-520)
முதலாம் பராந்தக சோழனின் மனைவி அருமொழி நங்கையார் ஆவாள் .
இவர்கள் கிபி 881 களில் இருந்து முதலாம் ராஜேந்திர சோழன் காலம் வரை பழுவூர் பகுதிகளை ஆண்டவர்கள் .குமரன் கண்டன்,குமரன் மறவன் ,மறவன் கண்டன் ,கண்டன் அமுதன் ,கண்டன் மறவன் போன்ற பெயர்களை பழுவூரை ஆண்ட வேட்டுவ குடியை சேர்ந்த அரையர்கள் தங்களது இயற்பெர்களாக வைத்து கொண்டார்கள் .
பழுவூரில் ஐயதரன் தெரிந்த கைக்கோளர் (ஒரு படை பிரிவின் பெயர்),வரிக்கூறு செய்பவர்கள் ,நியமித்தார் ,குபடவர்(செம்படவர் ),மயில் வேட்டைக்காரர் ஆகியோர்கள் சேர்ந்து ஆண்டார் திருவெண்ணை நல்லூர் உடையாருக்கு மடப்புறமாக நிலம் கொடுத்தார்கள் என்பதை சுந்தர ஈஸ்வரர் கோவில் கல்வெட்டு(கிபி 1108) கூருகிறது.
'...மதுராச்தரிக வடவாறக்கு மேற்கு ஆனை வேட்டுவன் காலுக்கு கிழக்கு '(கங்கை கொண்ட சோழபுரம் ,பிரகதீஸ்வரர் கோவில் கல்வெட்டு ; கிபி 13; , SII VOL-4, NO-523).
ஒரு வாய்க்காலுக்கு யானை வேட்டுவ குடி பெயரை வைக்க பட்டு உள்ளது .
யானை வேட்டுவன்=யானை வேட்டுவ குலத்தை சுட்டும் .
'பட்டாலி வதி என்கிற வாய்க்காலிலே ' (மிழலை, திருவீழிநாதர் கோவில் கிபி 1193 .1908:434)
பட்டாலி என்ற சொல் பட்டாலி வேட்டுவ குலத்தை குறிக்கும் .
"...தென்னாண்டானுக்கு நாங்கள் காணி செய்து குடுத்த கொற்றன்குடி குளத்தால் நீர்பாயும் நடுவில் வேட்டுவான் ஆன தனியானைவிட்டநல்லூர் நான்கெல்லைக்கும் ...இப்படி சோழிய இன்நடுவற வேட்டுவான் ஆன தனியானைவிட்டநல்லூற்க்கு வேட்டி முட்டவாள் பச்சை வினியோகம் எச்சோறு என்று சொல்லக் கடவதல்லவாகவும் இப்படி சந்திராதித்தவரை செல்லதாக கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொடுத்தோம் " '(திருமெய்யம், PSI-492;13). ஊர் பெயர் ஒரு வேட்டுவ குடி பெயரில் உருவாக்கபட்டு உள்ளது .
'விளத்தூர் நாட்டு மாங்குடி வேட்ட மங்கலத்து வேலிச் செய் ' (SII VOL-19 No-264)
வேட்டமங்கலம் =வேட்டு மங்கலம்
".. எய்ய சேதன் திடைக்கால் நாடாழ்வானை குத்து விச்சுக் கொன்னமையாலும் எதிரான் சிங்கன் வழி வாரா நிற்க்க வேட்டுவர் வழியிலே எரிஞ்சு வீர கல்" (திருச்சி துறையூர் கல்வெட்டு கிபி 11 )
"............க்கோதுகுலபட்ட ..ரை கொண்ட கோப்...உடையான் வயிரன்...ன் னேன் திருநெடுங்.....ட்டை மாசி முதல்லா .....ரு வேட்டுவன் நும் .ப ..ண்ணும் இந்நால்வ ..மலு இரவும் பகலும் .......ள்ளி"
(முதலாம் பராந்தக சோழன் (கிபி 907 -950 ); திருச்சி லால்குடி, திருநெடுங்கலம் திருநெடுங்கல நாதர் கோவில் கல்வெட்டு ; SII Vol- 13 No-335 ) .
வேட்டுவ குடியை சேர்ந்தவர்கள் திருநெடுங்கல நாதருக்கு விளக்கு எரிக்க கொடை கொடுத்ததை பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது .
'நிலத்துக்கு எல்லை சிறுகவூர் வேட்டப் பேற்றின் வடவாய் மூன்று மாக்காணியும்' திருச்சி லால்குடி சப்தரி ஈஸ்வரர் கோவில் கல்வெட்டு, SII Vol-4, No-240; 1931:250)
வேட்டப் பேற்றின் =வேட்டுப் பற்று
'சோழ நாட்டு தியாகவல்லி வளநாட்டு வேட்டக்குடி வேட்டக்குடியான் ஆதித்தன் புளியன் ' என்பவர் கோவிலுக்கு நிலம் கொடுத்ததை காஞ்சிபுரம், திருகழுகுன்றம் நெரும்பூர் கல்வெட்டு (கிபி 12) கூறுகிறது.
வேட்டக்குடி = வேட்டு குடி
வேட்டு குடி பெயரில் சோழ நாட்டில் ஒரு ஊர் இருந்துள்ளது .
'கீழ்பாற்கெல்லை வேடர்குடி எல்லை வரம்புக்கு மேற்கு ' (தஞ்சாவூர் குடந்தை நாகேஸ்வர சாமி கோவில்)
சோழ நாட்டில் செம்பியன் பெயரில் ஊர் ,கால்வாய் மற்றும் ஏரி பெயர்கள் பல இருக்கிறது .
சோழ நாட்டில் சில ஊர் ,கால்வாய் மற்றும் ஏரி பெயர்கள் வேட்டுவ குடி பெயரில் உருவாக்க பட்டு உள்ளது .
ஆனந்தகுமார். வரலாற்று ஆசிரியர்