தமிழ் ஆசிரியர் புலவர் ப.எழில்வாணன் அவர்கள் எழுதிய "யாப்பு விளக்கம்" நூல் வெளியீட்டு விழா
- Posted on Sat Feb 5, 2022
- 1125 Views
தமிழ்நாடு அரசின் தூய தமிழ்ப்பற்றாளர் விருது பெற்ற தமிழ் ஆசிரியர் புலவர் ப.எழில்வாணன் அவர்கள் எழுதிய
"யாப்பு விளக்கம்" நூல் வெளியீட்டு விழா
கடந்த 28.1.2022 அன்று கரூரில் சிறப்பாக நடைபெற்றது.
புலவர் ப.எழில்வாணன்
அவர்களின் இயற்பெயர் சுப்பிரமணியன் ஆகும். அது வடமொழிப் பெயராதலால் எழில்வாணன் எனத் தூய தமிழில் மாற்றிக் கொண்டார்.
இவரது பிறந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் உள்ள விருப்பாச்சி ஆகும்.
மரபுப் பாடல்கள் இயற்றுவதிலும் சிறுகதைகள், நாடகங்கள் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்ட இவர் பல்வேறு கவிதை நூல்களையும், உரைநடை நூல்களையும் படைத்துள்ளார்.
இவர் எழுதிய நூல்களாவன
ஒரு சொட்டுக் கண்ணீர், நீ தமிழ் மகனா?, செந்தமிழ்ச் செய்யுட்கோவை, கலைஞரின் வாகையும். மார்கழிப் பாவையும், தமிழ்ச்சோலை, பன்மலர்த்தேன், துன்பம் நீக்க வள்ளுவர் கூறும் வழிகள், குறும்பாவியங்கள், சிறுவர் புரட்சிக் கதைகள், இளைஞர் இலக்கியமும் பள்ளிப் பறவைகளும், பாவேந்தர்-பாவலரேறு ஒப்பாய்வு நூல், வெற்றி பெறுவோம்.
இவரது மற்றொரு படைப்பான
"யாப்பு விளக்கம்" நூல் வெளியீட்டு விழா
கடந்த 28.1.2022 அன்று கரூரில் சிறப்பாக நடைபெற்றது.
இத்தகைய சிறப்பு மிக்க நமது வேட்டுவக் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த தூய தமிழ் பற்றாளர் விருது பெற்ற புலவர் ப.எழிழ்வாணன் அவர்களின் பெருமைகளை போற்றுவதில் வேட்டுவர் டிவி பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.