சிரி சுந்தரபாண்டிய தேவருக்கு யாண்டு 20 வது மண்டபத்தூர் அந்துவ வேட்டுவர் உத்தமான் ....

  • Posted on Tue Feb 8, 2022
  • 1170 Views

இடம் :நாமக்கல் மாவட்டம் ,வெப்படை அருகே எலந்த குட்டை கிராமம் ,நெத்த மேடு காளி கோயில் அருகில் உள்ள நடுகல் .


காலம் :சுந்தர பாண்டியனின் 20 ஆவது ஆட்சி ஆண்டு ;கிபி 1305.


கல்வெட்டு செய்தி : சிற்பத்தின் கீழ் நான்கு வரிகளில் எழுத்துக்கள் பொறிக்க பட்டுள்ளது .வீரனின் கழுத்தில் அணிகலன்கள்,கைகளிலில் தோள் வளைகள் உள்ளது .வீரனின் இடைப்பகுதியில் இடைகச்சை,இடைகச்சையில் குறுவாள் காணப்படுகிறது.வீரன் இடது ,வலது கைகளில் குத்து ஈட்டியை பிடித்துள்ளார் .கல்வெட்டில் மூன்று ,நான்காவது வரிகள் சிதைந்து காணப்படுகிறது . அந்துவ வேட்டுவ குலத்தை சேர்ந்த மண்டபத்தூர் ஊராளி உத்தமான் என்பவர் சுந்தர பாண்டியனுக்கு ஆதரவாக போருக்கு சென்று போரில் இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல் .

                                                          கல்வெட்டு


   “ சிரி சுந்தரபாண்டிய தேவருக்கு யாண்டு 20 வது மண்டபத்தூர் அந்துவ வேட்டுவர் உத்தமான் ........................................”