வேட்டுவர் குடியை சேர்ந்த நடுகற்கள் 1.இடம்: விழுப்புரம் கள்ளக்குறிச்சி எடுத்தவாய் நத்தம் ஆத்துக்காடு வேடியப்பன் கோவில்

  • Posted on Thu Feb 10, 2022
  • 1526 Views

வேட்டுவர் குடியை சேர்ந்த நடுகற்கள்


1.இடம்: விழுப்புரம் கள்ளக்குறிச்சி எடுத்தவாய் நத்தம் ஆத்துக்காடு வேடியப்பன் கோவில்

ஆண்டு :கிபி 5-6

செய்தி: கடைவெண்மலைக்கோடு என்ற ஊரினை சேர்ந்த வேட்டுவர் குடியை சேர்ந்த கம்படாரு மகன் சாமி என்பவன் பகைவர்( பல்லவர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி ,இருவாய் என்ற ஊர்) ஆநிரைகளை கவரும் போரில் இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல். ஆறு வரிகளை உடைய வட்டெழுத்து கல்வெட்டு. இக்கல்வெட்டில் பேசப்பட்ட வேட்டுவர் முன்னை வேட்டுவ குடியை சேர்ந்தவர்.

 

வட்டெழுத்து கல்வெட்டு:

1. கடைவெண்

2. மலைக் கோட்

3. டு வேட்டுவரு இரு

4. வாய் தொறுக் கொ

5. ளுட் பட்டான் கம்பா

6. டரு மகன் சாமி கல்

 

கடைவெண் மலைக் கோட்டு- முனைப்பாடி நாட்டில் இருந்த ஒரு ஊர்.

வேட்டுவரு -வேட்டுவ குடியை சேர்ந்தவர்.

இருவாய் பல்லவர் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு ஊர் பெயர்

கொளுட் – கவர்தலில்

பட்டான் – வீர சாவடைந்தான் 

சாமி = தேவன்= கடவுள் =அரசன்

கல்- நடுகல்

  ஆய்ப்பாடி என்ற சொல் வாய்ப்பாடி என்று மருவும் இரு என்ற சொல் பெரிய என்ற பொருளை கொண்டது கால்நடைகள் நிறைந்த ஊர் இருவாய்.

 

 முன்னை வேட்டுவ ராஜா நடுகல்