வேட்டுவகுலத் தோன்றல் அருள்மிகு கண்ணப்ப நாயனார் குரு பூஜை விழா
- Posted on Sat Feb 12, 2022
- 1140 Views
வேட்டுவகுலத் தோன்றல் அருள்மிகு கண்ணப்ப நாயனார் குரு பூஜை விழா
இன்று 11.02.2022 தை மாதம் 29 ம் நாள் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் உலகுக்கே கண் தானத்தின் முன்னோடி அருள்மிகு கண்ணப்ப நாயனார் குரு பூஜைக்கான நாள். வரலாறு போற்றும் கண்ணப்ப நாயனாருக்கு நமது வேட்டுவக் கவுண்டர் சமுதாய மக்கள் சிவத்தலங்களிலும், தனிக்கோவில்களிலும் எழுந்தருளியுள்ள கண்ணப்பருக்கு ஊர் தோறும் குரு பூஜை வழிபாடு நடத்தி அருளாசி பெற்றனர். பல்வேறு ஊர்களிலும் குரு பூஜை விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்து கண்ணப்ப நாயனாருக்கு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது மகிழ்ச்சியளிக்கும் நிகழ்வாகும்.
புகழுரில் மேகபாலீஸ்வரர் கோவிலில் குரு பூஜை விழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட வேட்டுவ கவுண்டர் நல சங்கத்தின் சார்பாக ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் உள்ள கண்ணப்பர் நாயனாருக்கு குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.
கல்வித்தந்தை கே.வி.கே காளியப்பகவுண்டர் பொது நல அறக்கட்டளையின் சார்பில் கண்ணப்ப
நாயனார் குரு பூஜை விழா இன்று மாலை 6.00 மணியளவில் புஞ்சை புளியம்பட்டி அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள கண்ணப்ப நாயனார் சிலைக்கும் மற்ற நாயன்மார்களுக்கும் அபிஷேகமும், தீப ஆராதனையும் சிறப்பாக நடைபெற்றது. இல்விழாவை கல்வித்தந்தை
கே.வி. காளியப்பகவுண்டர்
பொதுநல அறக்கட்டளையின் தலைவர், செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னின்று நடத்தினார். விழா நிறைவில் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
தமிழகம் போற்றும் கண்ணப்ப நாயனாரின் குரு பூஜைவிழா வானது இன்று கொங்கு நாட்டை தலைமை இடமாக கொண்டு ஆட்சி ஆண்ட தலையூரில் இன்று கண்ணப்ப நாயநாரின் குருபூஜை தலையூர் மாசி திருவிழா கமிட்டியினரால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் கோட்டை காட்டு வலசு அருள்மிகு ஸ்ரீ கண்ணப்பநாயனார் திருக்கோவிலில் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.
கண்ணப்பநாயனார் குருபூஜை அறக்கட்டளை மற்றும்
கோட்டைக்காட்டுவலசு, பூசாரிபாளையம் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்கத்தின் சார்பாக கரூர் பசுபதீஸ்வரர் திருக்கோவிலில் கண்ணப்ப நாயனார் குருபூஜை விழா சீரும் சிறப்புடனும் நடைபெற்றது.
இன்று காலை விநாயகர், சுப்பிரமணியர், பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி,
சௌந்திரநாயகி, ஸ்ரீ கண்ணப்பநாயனார் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று
மாலையில் கண்ணப்பநாயனார் உற்சவத்திருமேனி சிறப்பு அலங்காரத்துடன்
திருக்கோயில் திருவீதிஉலாவும்
குமாரபாளையம் சிவத்திரு. எஸ்.சிவக்கண்ணன் ஒதுவார்
அவர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.
கரூர் மாவட்டம் தென்காளஹஸ்தி
ஸ்ரீ கண்ணப்ப நாயனார், ராகு - கேது உடன் கூடிய திருக்கோவில்
வெஞ்சமாங்கூடலூரில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ கண்ணப்ப நாயனாருக்கு குரு பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.
வெஞ்சமாங்கூடலூர் சிவன் கோவில் முன்பு அயோத்தியா சக்கரா தீர்த்தம், காசி கங்கா, யமுனா, சரஸ்வதி தீர்த்தம் காவேரி தீர்த்தம் வைத்து தீபாராதனை செய்து ஸ்ரீ கண்ணப்ப நாயனார் திருக்கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.
பாண்டமங்கலம் அருள்மிகு புதிய காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் 6-ஆம் ஆண்டு
கண்ணப்ப நாயனார் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில்
தலைமை
இடும்பை இளைய நாயக்கர். திரு. P. சோமசுந்தரம் பட்டகாரர்,
இருக்கூர்.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக
திரு. V.S.S.சோமசேகர், ஊர் காரியகாரர், பரம்பரை அறங்காவலர்
திரு.மொளசி P. முத்துமணி திரு. K.S. ராஜ்கவுண்டர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
https://youtu.be/5fI1Lz9avsQ