வேட்டுவ அரசன் செய்யான் பல்லவராயன்

  • Posted on Sat Feb 19, 2022
  • 1087 Views

வேட்டுவ அரசன் செய்யான் பல்லவராயன் 

கொங்கு வேட்டுவக் கவுண்டர் இன மன்னர் செய்யான்_பல்லவராயன் 

வரலாறு :-    மேல்கரைப் பூந்துறை நாட்டைச் சார்ந்த அறைச் சலூரில் கரைய வேட்டுவரில் செய்யான் என்பவர் ஓய்சல வீரவல்லாள வேந்தனிடத்தில் சேனை தலைவனாக இருந்தார். அவரது யுத்த தந்திரத்தை நன்கு மதித்து அந்த அரசன் பல்லவராயன் என்று பட்டப்பெயர் கொடுத்தான். தன்பெயருடன் செய்யான் பல்லவராயன்  என்று புகழுடன் வாழ்ந்தார். இவர் மீது சில பிரபந்தங்களும்  பாடப் பட்டு  உள்ளது. இவரது சாசனம் அறச்சலூர் புற்றிடங் கொண்ட நாயனார் ஆலயத்தின் தென்புறச் சுவரில் இருக்கிறது .. ஸ்வஸ்திஸ்ரீ போஜளவீர புஜ் பல வீரவல்லால தேவர் பிரதிவி ராஜ்ஜிய பரிபாலனம் .மேல்கரைப் பூந்துறை நாட்டு அறச்சலூர் கரையவேட்டுவரில் செய்யான் பல்லவராயனே இவ்வூரில் உடையார் புற்றிடங் கொண்ட நாயனார் கோயிலில் திருக்கட்டளையில் திருநிலைக் காலும் செய்வித்தேன் ..... இச்சாசனமிருக்கிறது.