நம் இனமான திரு.ராமசாமி அவர்களுக்கு விருதுடன் ரூ.5 லட்சத்துக்கான காசோலையுடன் ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள பதக்கமும் வழங்கப்பட்டு உள்ளது.
- Posted on Wed Mar 9, 2022
- 919 Views
நம் இனமான திரு.ராமசாமி அவர்களுக்கு விருதுடன் ரூ.5 லட்சத்துக்கான காசோலையுடன் ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள பதக்கமும் வழங்கப்பட்டு உள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று 8.3.2022 தலைமைச் செயலகத்தில், குடியரசு திருநாள் விழாவில் கலந்து கொள்ள இயலாத வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், திரு. நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது, காந்தியடிகள் காவலர் பதக்கம் ஆகிய பதக்கங்கள் / விருதிற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதக்கங்களையும், விருதினையும் வழங்கிச் சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை கடைபிடித்து அதிக உற்பத்தி திறனை பெற்றதற்காக “சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது” சேலம் மாவட்டம் பூலாம்பட்டி, கண்டிகவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமசாமிக்கு வழங்கப்பட்டு உள்ளது.
திரு.ராமசாமி அவர்களுக்கு விருதுடன் ரூ.5 லட்சத்துக்கான காசோலையுடன் ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள பதக்கமும் வழங்கப்பட்டு உள்ளது. பதக்கம் மற்றும் சான்றிதழை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
திரு.ராமசாமிகவுண்டர் அவர்களுக்கு வாழ்த்துக்களை வேட்டுவர் டிவி யின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.