வெங்கச்சி வேட்டுவர் அரசரின் காணி உரிமை.

  • Posted on Sat Mar 12, 2022
  • 2006 Views

மருதூர்க் கல்வெட்டு 

வெங்கச்சி வேட்டுவர் அரசரின் காணி உரிமை.


சங்ககிரி வட்டத்தில் ஒரு புதிய ஏரியினைப் பொதுப்பணித் துறை அமைத்த பொழுது. அந்த ஏரி அமைந்துள்ள ஓடையின் கரையில் (மதுரகாளியம்மன் ஓடை) என்று தற்போது வழங்கப்படுகின்றது. அந்த அணையின் மேல் கரையில் மதுரகாளியம்மன் கோயில் மிகச் சிறியதாக இருந்தாலும் பழைமைச் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அந்த ஏரிக்கரையில் ஒரு கல்வெட்டும் அமைந்துள்ளது.  செவ்வக வடிவக்கல். 


மதுரகாளியம்மன் என்று அந்தக் கோயிலின் பெயராக வழங்கி வரு கின்றோம். இந்த இடத்திற்குப் பெயர் மருதூர் காளியம்மன் என்பதே காலப்போக்கில் மதுர காளியம்மன் என்று வழங்கி வருவதை அறியலாம். 


இருப்பலி என்பது அங்கிருந்து வெகு பக்கத்தில் உள்ள ஊர். எனவே அந்தப் பகுதி வடகரை நாடு என வழங்கி வந்துள்ளதை அறியலாம்.


வெங்கச்சி வேட்டுவர்ரில்  காடுவெட்டி என்பது பல்லவர்களின் சிறப்புப் பெயர்களுள் ஒன்று. கொங்கு நாட்டின் பூர்வ குடிகளான வேட்டுவருக்கும் இப்பெயர் உண்டு. 


வேட்டுவர் பிள்ளை என்ற பின்னொட்டு கொண்டுள்ளதை அறியலாம். திருவாளப் பிள்ளை அவர்களின் காணி ஊர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. 


கல்வெட்டில் காலம் குறிக்கப்படவில்லை. எழுத்தமைதி கொண்டு இதனைப் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வைக்கலாம். மதுரகாளியம்மன் கோயில் அவ்வளவு பழமையுடையது என்பதையும் அறியலாம்.